மத்திய அரசைக் கண்டித்து ப.வேலூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ப.வேலூரில் திமுகவினர்   ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பரமத்திவேலூரில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூரில் அண்ணா படிப்பகம் அருகே திமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர திமுக பிரமுகர் கண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மாரப்பன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்கரவர்த்தி, நகர துணைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!