சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லை: டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லை: டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது
X
சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லைடிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

பரமத்திவேலூரில் சிறுமிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குசாலை, வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (20). டிப்ளமோ இன்ஜினியர். இவர் பரமத்திவேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி செல் போன் செய்து காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Tags

Next Story
ai tools for education