பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பரமத்திவேலூரில் தபால் துறையின் புதிய உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

தொழிற்சங்கங்களை முடக்கும் தபால் துறையின் உத்தரவை திரும்பப் பெறக்கோரி பரமத்தி வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், தொழிற்சங்கங்களை முடக்கும் வகையில் தபால்துறையில் கொண்டு வந்துள்ள புதிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் பரமத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, திருச்செங்கோடு கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த கலையரசி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிளை செயலாளர் விஜயகுமார், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கரிகாலன், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்