நாமக்கல் அருகே பாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி சாவு

நாமக்கல் அருகே பாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி சாவு
X

பைல் படம்

நாமக்கல் அருகே ரோட்டில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் அருகே ரோட்டில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரத்தில் இருந்து எஸ்.வாழவந்தி செல்லும் வழியில், எம். ராசாம்பாளையம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டின் குறுக்கே சிறிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. எல்லப்பாளையம் அருகே ரோட்டின் குறுக்கே சுமார் 6 அடி பள்ளம் தோண்டப்பட்டு சிறிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதற்கான எச்சரிக்கை அமைப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், எல்லப்பளையத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (31) என்பவர், தோட்டத்திற்கு, தண்ணீர் பாயச்சுவதற்காக அவ்வழியாக டூ வீலரில் சென்றார். அவர் ரோட்டில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து, அதே இடத்தில் இறந்துவிட்டார்.

இதைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்கமுயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரது உடலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாலம் அமைக்கும் பணிகளை கவனக்குறைவாக செய்யும் கான்ட்ராக்டர் மீது நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாலம் அமைக்கும் கான்ட்ராக்டர், எச்சரிக்கை அறிவிப்பு அமைக்காதததால்தான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே கான்ட்ராக்டரை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil