நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 216 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி  வெளியே சுற்றிய 216 வாகனங்கள் பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் டூ வீலர்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 216 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் சீன கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யவும், லாக் டவுன் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றிய 214 பேரின் டூ வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதேபோல் ஒரு டிராவல்ஸ் வேனும், சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த 534 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!