ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு: விவசாயிகள் கவலை

X
கோப்பு படம்
By - P.Nathan, Reporter |8 Oct 2021 8:00 AM IST
பரமத்திவேலூரில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் விலை சரிவு ஏற்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத்தேங்காய் ஏலம் நடைபெறுகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 15,619 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 99.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 84.89-க்கும், சராசரியாக ரூ. 95.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 14,17,788-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், கொப்பரை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu