மயில்களிடமிருந்து பயிர்களை காக்க இயற்கையான முறைகள்; வேளாண் துறை விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பாலப்பட்டி, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளயைம் பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், நிலக்கடலை, சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர்.
நாமககல் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளாக தேசிய பறவையான மயிலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மயில்கள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்கு சென்று அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்கடலை, நெல், மக்காசோளம், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை கொத்தி சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது.
மயில்கள் தேசிய பறவை என்பதால் அதனை அடித்து விரட்டவோ, மருந்து வைக்கவோ முடியாது. அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனால், மயில்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வழிமுறைகளை அரசு தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் விவசாய முன்னேறற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஏற்பாட்டில், மயில்களிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்ற வனவிலங்கு விரட்டி மருந்தை தண்ணீரில் கலந்து, பயிர்கள் மீது தெளித்தால், காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள், முயல்கள், எலிகள் மற்றும் மயில்கள் ஆகியவை, பயிர்களின் அருகில் வராது. எனவே இந்த முறையில், விலங்குகளை துன்புறுத்தாமல் பயிர்களைக் காப்பாற்றலாம் என விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அதிகாரி விசுவநாதன், விவசாய சங்க பிரதிநிதிகள் செல்லப்பன், முத்துசாமி, பரமசிவம் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu