கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு

கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
X

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில், ரோடு அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் திடுமல் பஞ்சாயத்து, ஆவாரங்காடு முதல் சின்னாம்பாளையம் வரை ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள சாலைப் பணிகளின் தரத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார். அப்போது , அந்த ரோட்டின் ஒரு பகுதியில், 1க்கு 1 சதுர அடி அளவிற்கு வெட்டி எடுத்து குறிப்பிட்ட அளவிற்கு தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.

பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொரிச்சாக்கவுண்டம்பாளையம் முதல், சின்னமருதூர் வரை 2 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்று வரும் ரோடு பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று, ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது டிஆர்டிஏ இன்ஜினியர் வரதராஜ பெருமாள், பிஆர்ஓ சீனிவாசன், கபிலர்மலை பிடிஓக்கள் டேவிட்அமல்ராஜ், விஜயகுமார் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story