ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை

ப.வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை
X
பரமத்திவேலூரில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.13.78 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற, ஏலத்திற்கு 11,191 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், டெண்டர் முறையில் தோங்காய் பருப்பு கொள்முதல் செய்தனர்.

தேங்காய் பருப்பு, அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.62.99-க்கும், சரசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 310க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17,172 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19க்கும், சராசரியாக ரூ.82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13,78,324க்கு டெண்டர் மூலம் விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!