ப.வேலூர் வேளாண் ஏல மார்க்கெட்டில் ரூ.16 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

ப.வேலூர் வேளாண் ஏல மார்க்கெட்டில் ரூ.16 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
X

பைல்படம்.

பரமத்திவேலூர் எலக்ட்ரானிக் வேளாண்மை விற்பனை மார்க்கெட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

பரமத்திவேலூர் எலக்ட்ரானிக் வேளாண்மை விற்பனை மார்க்கெட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

பரமத்திவேலூர் வெங்கமேட்டில், தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை விற்பனை மையம் உள்ளது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு கடந்த வாரம் 19,510 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.01-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.15க்கும், சராசரியாக ரூ.88.39க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,97,076 மதிப்பில் வியாபாரம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 18,638 கிலோ தேங்காய் பருப்பு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.89.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.35-க்கும், சராசரியாக ரூ.88.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,16,682க்கு விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி