தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் சேதம்
X

பைல் படம் 

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

கபிலர்மலை அருகே தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் சேதமடைந்தது.

கபிலர்மலை அருகே கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் மட்டைகளை உரித்து மஞ்சு நார் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சம்பவத்தன்று, வேலை முடிந்தவுடன் வழக்கம் போல் மில்லை பூட்டி விட்டு சென்று விட்டனர். அடுத்த நாள் காலை மில்லில் தேங்காய் நார் குடோன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நார் குடோனில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும்‌ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் மஞ்சு நார் தீயில் எரிந்து நாசமானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!