தூய்மை இந்தியா: பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்திய பாஜக

தூய்மை இந்தியா: பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்திய பாஜக
X

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூரில், பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் காவிரி ஆற்றுப்பகுதி தூய்மைப்படுத்தும் பணி துவக்கப்பட்டது.

ப.வேலூர் காவிரிக்கரையில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் பிரபு தலைலமை வகித்தார். மாவட்டத் பாஜ தலைவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், இணை ஒருங்கிணைப்பாளர் நரேஷ், பரமத்தி ஒன்றியத் தலைவர் அருண் மற்றும் இளைஞரணியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்த முட்புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், ஆற்றில் வீசப்பட்ட பழைய துணிகள் போன்றவற்றை அகற்றி, டவுன் பஞ்சாயத்து குப்பை வாகனம் மூலம் குப்பைக் கிடங்கிங்கிற்கு அனுப்பிவைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!