ப.வேலூர் அருகே கார் விபத்து: ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழப்பு

ப.வேலூர் அருகே கார் விபத்து: ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழப்பு
X

பைல் படம்.

ப.வேலூர் அருகே சாலைத்தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டல் அதிபரின் மகன் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கண்டர் பள்ளி ரோட்டில் வசிப்பவர் ராஜமாணிக்கம் (65). இவர் ப.வேலூர் அர்பன் பேங்க் தலைவராகவும், மாவட்ட அதிமுக பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மகன் அகிலேஸ்வரன் (33) இவர் ப. வேலூரில் நகைக் கடை நடத்தி வருகிறார்.

அகிலேஸ்வரன் மனைவி நவுலிஸ்ரீ (21) என்பவரை பிரசவத்துக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், சேர்த்துவிட்டு, மீண்டும் காரில் ராஜமாணிக்கம் அவரது மகன் அகிலேஸ்வரன், அவரது உறவினர்நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் பாண்டியன் என்பவரின் மகன் சிபி (33) ஆகிய 3 பேரும் பரமத்திவேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிந்தனர்.

காரை அகிலேஸ்வரன் ஓட்டிச்சென்றார். அதிகாலை 4.30 மணியளவில், பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் அருகே சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த சிபி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜமாணிக்கம் கோவையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அகிலேஸ்வரன் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!