ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கரூர் சென்ற 40 பாஜகவினர் ப.வேலூரில் கைது

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கரூர் சென்ற  40 பாஜகவினர் ப.வேலூரில் கைது
X

பைல் படம்.

BJP News Today-பரமத்திவேலூரில் இருந்து, கரூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற 40 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

BJP News Today-தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து கரூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் பரமத்திவேலூரில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ப.வேலூர் டிஎஸ்பி கலையரசன் தலைமையில், வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் ரோட்டில், பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே தடுப்புகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.

அதில் கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில், கரூரில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் கைது செய்யப்பட்ட 40 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!