பரமத்திவேலூரில் மீண்டும் பழைய இடத்தில் செயல்படத்தொடங்கிய வாழைச் சந்தை

பரமத்திவேலூரில் மீண்டும் பழைய இடத்தில் செயல்படத்தொடங்கிய  வாழைச் சந்தை
X

பைல் படம்.

பரமத்தி வேலூரில் தற்காலிக இடத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலச்சந்தை மீண்டும் பழைய இடத்தில் செயல்படத் துவங்கியது.

பரமத்தி வேலூரில் கொரோனா தொற்று பரவல் காரணமா தற்காலிக இடத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலச்சந்தை மீண்டும் பழைய இடத்தில் செயல்படத்துவங்கியது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வந்த வாழைத்தார் ஏலச் சந்தை, கடந்த மாதம் முதல் பழைய பைபாஸ் ரோட்டில், செல்லாண்டியம்மன் கோயில் அருகே தற்காலிகமாக இடமாற்றம் செய்து திருச்செங்கோடு ஆர்டிஓ உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் சந்தை நடத்திட போதிய வசதி இல்லாததால் விவசாயிகளும், வியபாரிகளும் சிரமப்பட்டு வந்தனர். மீண்டும் வாழைத்தார் சந்தையை பழைய இடத்தில் நடத்துவது தொடர்பாக திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி தலைமையில் விவசாயிகள், வருவாய்த் துறையினர், பேரூராட்சி, வேளாண்மைத் துறையினர் மற்றும் போலீசார் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முடிவில், மீண்டும் வாழைத்தார் ஏலச் சந்தையை பழைய இடத்திலேயே திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாள்கள் மட்டும் நடத்திக்கொள்ள ஆர்டிஓ அனுமதி அளித்தார்.

இதையொட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள பழைய இடத்திலேயே வாழைத்தார் ஏலச் சந்தை தொடங்கியது. இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொரோனா நெறிமுறைகளை அனுசரித்து கலந்துகொள்ள வேண்டும் என்று பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!