ப.வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: ரூ.1.50 லட்சம் தப்பியது

ப.வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: ரூ.1.50 லட்சம் தப்பியது
X

பரமத்தி வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. 

பரமத்தி வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக ரூ.1.50 லட்சம் தப்பியது.

பரமத்தி வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. 4 மதுபாட்டில்களையும், கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக ரூ.1.50 லட்சம் தப்பியது.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் இரண்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 விற்பனையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணி, விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் கடையைப் பூட்டி விட்டு சென்றனர். அடுத்த நாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ப.வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த ப.வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் மற்றும் போலீசார் கடைக்குள் சென்று பார்த்த போது 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 மதுபான பாட்டில்கள் மட்டும் திருட்டு போனது தெரிய வந்தது. கடைக்குள் இருந்த மதுபானங்கள் விற்பனை செய்த பணம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுக்க முடியாமல் கொள்ளையர்கள் விட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story