பரமத்திவேலூர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு பூஜை
X

திருவாதிரையை முன்னிட்டு, ப.வேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில், நடராஜப் பெருமாள் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சிவகாமசுந்தரி அம்மன் தங்ககக்கவச அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.

பரமத்திவேலூர் பகுதியில் திருவாதிரையை முன்னிட்டு கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள திருஞானசம்பந்தர் மடம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஆருத்ர தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ப.வேலூர் திருஞானசம்பந்தர் மடத்தில் உள்ள சிவகாம சுந்தரி அம்மன் தங்கக் கவச அலங்காரத்திலும், நடராஜப் பெருமாள் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நன்செய் இடையாறில் உள்ள திருவேலீஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!