மோகனூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மோகனூர் பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

மோகனூர் பகுதியில் நாளை 11ம் தேதி மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்திவேலூர் தாலுகா, வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை 11ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

அதன்படி, மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னகரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம் பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture