சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து;ஒருவர் உயிரிழப்பு

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து;ஒருவர் உயிரிழப்பு
X
சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, சோழசிராமணி அருகே உள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் சக்திவேல் (20). நாமக்கல் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் லோகநாதன் (27). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஜமீன் இளம்பள்ளியில் நடைபெற்ற கோவில் விழாவிற்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சோழசிராமணி அருகே வந்தபோது, நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள், ரோடு ஓரம் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சக்திவேல் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோகநாதன் படுகாயம் அடைந்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story