பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து

பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து
X

தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட  தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

Fire Accident -பரமத்தி வேலூர் அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.3 லட்சம் சேதமானது.

Fire Accident -நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ராசப்பன் (50). இவர் அப்பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்பட்ட தேங்காய் நார்களை கொட்டி வைத்திருந்த இடத்தின் வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு திடீரென உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தேங்காய் நார் குவியல் மீது விழுந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சரவணன் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தேங்காய் நாரில் பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!