பப்ஜி விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு; கல்லூரி மாணவி தற்கொலை

பப்ஜி விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு;  கல்லூரி மாணவி தற்கொலை
X

பைல் படம்.

பரமத்திவேலூர் அருகே பப்ஜி விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் சந்தியா (19). ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சந்தியா அடிக்கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். வீட்டு வேலைகளை கவனிக்காததால் அவரது தாயார் அம்சவேனி அவரை செல்போனில் கேம் விளையாடக்கூடாது என்று கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சந்தியா, சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தார். மயக்கமடைந்து உயிருக்கு போராடிய அவரை அவரது பெற்றோர்கள் மீட்டு பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்