பரமத்தி வேலூரில் உலக நன்மை வேண்டி மகா மாரியம்மனுக்கு 5,008 இளநீர் அபிஷேகம்

பரமத்தி வேலூரில் உலக நன்மை வேண்டி மகா மாரியம்மனுக்கு 5,008 இளநீர் அபிஷேகம்
X

 சிறப்பு அலங்காரத்தில்  மகா மாரியம்மன்.

உலக நன்மை வேண்டி பரமத்தி வேலூர் மகா மாரியம்மனுக்கு 5,008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் உள்ளது. உலக நன்மை வேண்டி, மாதம் மும்மாரி பொழியவும், நோய்நொடிகள் நீங்கி மக்கள் கொரோனோ தொற்றில் இருந்து முழுமையாக விடுபட வேண்டியும், இந்தக் கோயிலில் 5,008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேர்த்திக்கடனாக இளநீர்களை கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.

பின்னர் 5,008 இளநீரைக் கொண்டு விநாயகருக்கும், மகாமாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இளநீர் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்