பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

பரமத்திவேலூர் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிகள்களை பறிமுதல் செய்தனர்.

பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் ரோட்டில், சிறுகிணத்துபாளையம் அருகே ஜேடர்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, அவர்கள் கபிலர்மலை அய்யன்தோட்டத்தைச் சேர்ந்த சத்தியா மற்றும் கபிலக்குறிச்சியை சேர்ந்த தனசேகர் ஆகியோரது வீட்டில் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்த பொத்தனூர் தேவராயசமுத்திரத்தை சேர்ந்த ஜெயசூர்யா (31), நன்செய் இடையாறைச் சேர்ந்த மோகனசுந்தரம் (34) மற்றும் வடகரையாத்தூரை சேர்ந்த அமர்நாத் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஆடுகளை திருடி விற்பனை செய்த ரொக்கம் ரூ.16 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!