பரமத்திவேலூரில் பட்டப்பகலில் காரில் இருந்து ரூ.20 லட்சம் கொள்ளை

பரமத்திவேலூரில் பட்டப்பகலில் காரில் இருந்து ரூ.20 லட்சம் கொள்ளை
X

பைல் படம்.

Money Robbery - ப.வேலூரில் பட்டப்பகலில் காரில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Money Robbery - நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (49) ரியல் எஸ்டேட் அதிபர். அவர் நேற்று மதியம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள பேங்க் ஒன்றில் இருந்து ரூ. 8 லட்சம், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பெற்ற கடன் தொகை ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ. 20 லட்சத்தை காரில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டுக்கு சென்ற பாலசுப்பிரமணி பணத்தை காரின் பின் சீட்டில் இருந்து எடுக்காமல் வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே செல்வதற்காக பாலசுப்பிரமணி காரை எடுக்க வந்துள்ளார். அப்போது காரின் பின் சீட்டில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியார் இது குறித்து அவர் பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.

அங்கு விரைந்து வந்த ப.வேலூர் டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது பேங்கில் இருந்து இவரது காரை 3 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்ததும், பின், சிறிது நேரத்தில் அந்த நபர்கள் அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் அந்நபர்கள் காரில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், பாலசுப்பிரமணி வீட்டிற்குள் சென்றபோது காரின் கதவுகளை பூட்டாமல் சென்றதால் அவர்கள் எளிதாக பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இக்கொள்ளைச் சம்பவம் பரமத்தி வேலூரில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!