கீரம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

கீரம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்
X

பைல் படம்.

கீரம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (47), அவரது உறவினர்கள் அழகுராஜா (31), கணேசன் (30), அம்சகொடி (50), ஜெயபாண்டியன் (42), அழகுராஜா மனைவி சுகன்யா (25) ஆகியோர் ஒரு காரில் கோடங்கிப்பட்டியில் இருந்து பெங்களூருக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் சிலம்பரசன் (32) ஓட்டி வந்தார். கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே கார் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த ஒரு வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை திருப்பினார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார், காயமடைந்த சுரேஷ், அழகுராஜா, கணேசன், அம்சகொடி மற்றும் டிரைவர் சிலம்பரசன் ஆகியோரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!