ப.வேலூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது: சரக்கு ஆட்டோ பறிமுதல்
பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ஓலப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த நன்செய் இடையாறை சேர்ந்த கேசவன் (23), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ மற்றும் 80 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu