பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்.

பரமத்திவேலூர் பகுதியில் வருகிற 16ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து பரமத்திவேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்த்தில் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 16ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால், பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!