பரமத்திவேலூரில் ரூ.14.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.14.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம்
X

பைல் படம்

பரமத்தி வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.14.5 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் வெங்கமேட்டில், தேசிய எலக்ட்ராக்னிக் வேளாண்மை மார்க்கெட் உள்ளது. இங்கு வாரம் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 27,757 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மறைமுக ஏலத்தில், தேங்காய் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.75.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.89-க்கும், சராசரியாக ரூ.73.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19,56,061 மதிப்பில் ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, 21,223 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.78.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.69-க்கும், சராசரியாக ரூ.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14,58,534 மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future