மோகனூரில் தங்கையை கர்ப்பிணியாக்கிய காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது..!

மோகனூரில் தங்கையை கர்ப்பிணியாக்கிய  காமக்கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது..!
X
மோகனூரில் தங்கையை கர்ப்பிணியாக்கிய காமக்கொடூரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அம்மாபேட்டை நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு, 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி குடும்பத்தினர் அம்மாபேட்டையிலும், இரண்டாவது மனைவி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் மோகனூரில் வசித்து வருகின்றனர்.

கூலி தொழிலாளி, தனது மூன்றாவது மனைவியுடன் கரூரில் வசித்து வருகிறார். மோகனூரில் இரண்டாவது மனைவியின் 14 வயது சிறுமி, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கூலி தொழிலாளியின் முதல் மனைவியின் மகன் சுரேஷ் (31) என்பவர்தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது. அவர், மோகனூரில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி, கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனது 14 வயது தங்கையை, மிரட்டி பலமுறை பாலியல் பலாத்தாரம் செய்ததுடன், அதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிட்டி உள்ளார். அதன் காரணமாக சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மோகனூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!