பரமத்திவேலூரில் உடல்நலக்குறைவால் லாரி ஓட்டுனர் தற்கொலை

பரமத்திவேலூரில் உடல்நலக்குறைவால் லாரி ஓட்டுனர் தற்கொலை
X

பரமத்திவேலூர் அருகே திருமணமான 4 மாதத்தில் லாரி டிரைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை - போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் தனசீலன்(30), இவர் கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த மைதிலி (25) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். மனைவி மைதிலி மூன்று மாத கர்ப்பிணி ஆவதால் அவர் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

லாரிக்கு சென்றுவிட்டு நான்கு நாட்களாக சூரியம்பாளையத்தில் உள்ள வீட்டில் தனசீலன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனசீலன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து விட்டிற்கு வந்தவர் கதவை பூட்டிக்கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலே தனசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக்குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் தனசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்ந்நிலையில் உயிரிழந்த தனசீலன் முன்னதாக கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்னுடைய மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என எழுதி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் விசாரணை முடிந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என கூறுகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!