வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
X

பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளதால் இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு,கரூர்,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரமத்திவேலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகள் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வது பரமத்திவேலூர் வாழைசந்தையின் சிறப்பம்சம் ஆகும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ. 450 வரை விற்பனையானது. ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400–க்கும், தேன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350–க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ350–க்கும் ஏலம் போனது.மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 முதல் ரூ.5–க்கு விற்பனையானது.

இதுகுறித்து வாழை விவசாயி கூறுகையில், சென்ற வாரத்தை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் விலை அதிகரித்துள்ளதாகவும் பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் வாழை தார்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் வரும் காலங்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself