ராசிபுரம் பங்குனி உத்திர திருவிழா

ராசிபுரம் பங்குனி உத்திர திருவிழா
X
ராசிபுரம் சிவசுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் அரிசி, மளிகை பொருட்கள் தானம் செய்ய வேண்டிய அழைப்பு

பங்குனி உத்திர திருவிழா ராசிபுரத்தில் வரும் 11ம் தேதி

ராசிபுரம் அருகில் உள்ள பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து, குருசாமிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர் திருவிழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னதாக, சுவாமி திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து அன்னதானமும் தேர் திருவிழாவும் நடைபெறும். தேர் திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவதற்காக, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை பக்தர்கள் தானமாக வழங்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Next Story