அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்

அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
X
அரசு அனுமதியின்றி மண் கடத்தல், எருமப்பட்டியில் லாரி பறிமுதல் செய்த அதிகாரிகள்

மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

எருமப்பட்டி அருகில் உள்ள அலங்காநத்தம் பஞ்சாயத்து கெஜகோம்பை பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) செல்வம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கெஜகோம்பையில் இருந்து கிராவல் மண் ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில், அரசு அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story