பள்ளிப்பாளையம்: கரும்பு கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - அமைச்சர் மதிவேந்தன்
பள்ளிப்பாளையம்: ''பொங்கல் கரும்பு கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை'' என, பள்ளிப்பாளையத்தில் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பஞ்., பகுதியில் வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 4 புதிய கூடுதல் வகுப்பறைகள், 13.56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 18.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் விழா, நேற்று பஞ்., தலைவர் வசந்தி வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், ஈரோடு எம்.பி., பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அமைச்சர் மதிவேந்தன் பேச்சு
பின், அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:
கரும்பு கொள்முதலில் முறைகேடு இல்லை
சமயசங்கிலி பகுதியில், கரும்பு கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தேன். முறைகேடு ஏதும் நடக்க வில்லை. தவறான தகவல் என, தெரியவந்துள்ளது.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள், பள்ளிகள் சீரமைப்பு
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள், பள்ளிகள், 400 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். விடுதிகளில், 'சிசிடிவி' கேமரா வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் வழங்கப்படும் உணவின் தரத்தையும் நானே ஆய்வு செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu