கோர்ட் அவமதிப்பு வழக்கில் யுவராஜ் ஆஜர் : மே 12-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர்.
நாமக்கல்,
கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்பாக தொடர்பாக நேற்று நாமக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை மே 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்திரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், இன்னஜினியரிங் பட்டதாரி. அவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை பெற்ற சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி கோகுல்ராஜ் வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிமன்றம் மூலம் அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நாமக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் நந்தினி, விசாரணையை மே 12ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu