புதுச்சத்திரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை

புதுச்சத்திரம் அருகே இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தற்கொலை
X
புதுச்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் மோனிகா (22). இன்ஜினியரிங் படிப்பு முடித்துள்ளார். அவர் வீட்டில் இருந்தவாறே டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு படித்து வந்தார்.

கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஆத்தூர் அருகே ஆசிரியர் வீட்டில் டூவீலர் திருட்டு! போலீசார் விசாரணை