நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் இளைஞர் திருவிழா

நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் இளைஞர் திருவிழா
X

நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திர சார்பில் நடைபெற்ற, இளைஞர் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளைஞர் திருவிழா நடைபெற்றது.

மத்திய அரசின், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை கீழ் இயங்கும், நாமக்கல் நேரு யுவகேந்திரா மற்றும் பி ஜி பி கலை அறிவியல் கல்லூரியின், ஜூனிர் ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய இளைஞர் திருவிழா பிஜிபி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் கணபதி தலைமை வகித்தார்.

மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் சரண் கோபால் முன்னிலை வகித்தார். கல்லூரி ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் செல்வ குமார் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசினார். ஓய்வுபெற்ற நீதிபதி விடியல் குகன், சமூக ஆர்வலர் சிவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். நாமக்கல் ரெரோ தொண்டு நிறுவன இயக்குனர் தில்லை சிவகுமார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.ஆர்.ஓ .பி.மணிகண்டன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கல்லூரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டோகிராபி போட்டியில் முதல் இடத்தைபி ஜி பி கல்லூரி சுரேஷ், இரண்டாம் இடத்தை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கல்லூரி பிரகாஷ்ராஜ், 3 ஆம் இடத்தை விவேகானந்தா மகளிர் கல்லூரி துர்கா தேவி ஆகியோர் பெற்றனர்

மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் ஸ்ரீ தாரவி முதல் பரிசையும், ராகுல் இரண்டாம் பரிசையும், ரசஷிவந்த் மூன்றாம் பரிசு செய்யும் வென்றனர். குரூப் டாண்ஸ் போட்டியில் விக்னேஷ் அணி முதல் பரிசையும் , ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கல்லூரி இரண்டாம் பரிசையும், கிருஷ்ணா அணி 3 ஆம் பரிசையும் பெற்றனர். பாட்டு போட்டியில் ஹரிஹரன் முதல் இடத்தையும், பவித்ரா 2ஆம் இடத்தையும், அபிநயா 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

ஓவியப்போட்டியில் சுதா முதல் பரிசையும், பிரீத்தா 2 ஆம் பரிசையும், ஜனனி 3 ஆம் பரிசையும் பெற்றனர். நிகழ்ச்சியில், 2047 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உலக அளவில் எவ்வாறு இருக்கும் என்ற குரூப் டிஸ்கஷன் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான அரசு மற்றும் தனியார் கல்லூரிமாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்னர். முடிவில் நாமக்கல் நேரு யுவகேந்திரா ஏ. பி. ஏ. வள்ளுவன் நன்றி கூறினார்.

Tags

Next Story