கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நாமக்கல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெகதீஷ் ( 20), லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற ஜெகதீஷ் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் அடுத்த நாள், ஜெகதீஷ் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜெகதீஷ் உடலை மீட்டனர்.

நாமக்கல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஜெகதீஷ் கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார் என்றும், நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

Tags

Next Story