மோகனூர் அருகே உலக தண்ணீர் தின விழா மாதேஸ்வரன், எம்.பி., பங்கேற்பு

மோகனூர் அருகே உலக தண்ணீர் தின விழா    மாதேஸ்வரன், எம்.பி., பங்கேற்பு
X

மோகனூர் அருகே கிராம பஞ்சாயத்து தூய்மைப்பணிக்காக, பேட்டரி வாகனங்களை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வழங்கினார்.

வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் கலந்துகொண்டார்.

நாமக்கல்,

வெள்ளாளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் கலந்துகொண்டார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஆண்டாபுரம் பஞ்சாயத்து வெள்ளாளப்பட்டி கிராமத்தில், தனியார் வங்கியின் சமூக பொறுப்பு திட்டம் மூலம் நடைபெற்ற 9,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பஞ்சாயத்திற்கு ஒப்படைக்கும் விழா மற்றும் ஆண்டாபுரம், சின்னப்பத்தம்பட்டி பஞ்சாயத்து தூய்மைப் பணிக்காக பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்து பேட்டரி வாகனங்களை வழங்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் தனியார் வங்கி அலுவலர்கள் ராஜேஸ்வரி, நவராஜா, சதீஷ்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை பொறுப்பாளர் முருகேசன், குமாரசாமி, சரவணன், சதீஷ், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story