நாமக்கல் அறிவுத் திருக்கோயிலில் ஜன.1 முதல் உலக அமைதி வார விழா

பைல் படம்.
நாமக்கல் நரசிம்மர் சன்னதித் தெருவில் உள்ள அறிவுத் திருக்கோயிலில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் வருகிற ஜன.1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தினசரி மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை உலக அமைதி வார விழா நடைபெறுகிறது.
ஜனவரி 1ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ராசிபுரம் மனவளக்கலை மன்ற தலைவர் சவுந்திரராஜன் கலந்துகொண்டு ஏன் கவலையை ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேசுகிறார். 2ம் தேதி ஆழியாறு விரிவாக்க இயக்குனர் உழவன் தங்கவேலு தெய்வீக நீதிமன்றம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஜனவரி 3ம் தேதி சேந்தமங்கலம் டாக்டர் ஜெயபால் இறைவனின் தன்மாற்றம் என் தலைப்பில் பேசுகிறார். 4ம் தேதி உன்னியூர் மாணிக்கம் விதியும் மதியும் என்ற தலைப்பில் பேசுகிறார். 5ம் தேதி ஆழியாறு விஷன் திட்ட இணை இயக்குனர் அருட்செல்வி இறைவனின் கருணை என் தலைப்பில் பேசுகிறார்.
ஜனவரி 6ம் தேதி ராசிபுரம் டாக்டர் விஜயலட்சுமி நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்டும் வழிகள் என்ற தலைப்பில் பேசுகிறார். 7ம் தேதி ஆழியாறு விஷன் திட்ட இயக்குநர் வேதசுப்பையா அறவாழ்வுக்கு ஆன்மீகம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மனவளக்கலை மன்ற தலைவர் ராமு, செயலாளர் மனோகரன், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu