நாமக்கல் அருகே தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல் அருகே தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் கிராமம், கீழ புதூரை சேர்ந்தவர் யோகராஜன் (46), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி மோகனூரில் உள்ள தனது உறவினரின் காய்கறி கடைக்கு சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை சாதாரண காயம் என நினைத்து இவர் வீட்டில் ஓய்வெடுத்தார்.

அடுத்த சில நாட்களில் திடீரென அடிக்கடி தலைவலி வந்ததால் தொடர்ந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யோகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தங்கவேல், எஸ்எஸ்ஐ தமிழழகன் ஆகியோர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story