திமுக ஆட்சியில் தான் மகளிர் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளனர் : அமைச்சர் பெருமிதம்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, ராஜேஷ்குமார், எம்.பி., எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.
நாமக்கல்,
தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் மகளிர் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளனர் என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், சமூக நலன் மறறும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 165 பயனாளிகளுக்கு, ரூ. 1.74 கோடி மதிப்பில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமணநிதி உதவி வழங்கிப் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், பெண்களின் வாழ்க்கை தரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, பஸ்களில் இலவச விடியல் பயணம், காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த 35 பெண்களுக்கு, தலா, 25,000 ரூபாய் வீதம் ரூ. 8.75 லட்சம் திருமண நிதியுதவி, டிப்ளமோ, படம் படித்த 130 பெண்களுக்கு தலா ரூ. 50,000 வீதம், ரூ. 65 லட்சம் திருமண நிதியுதவி, 165 பெண்களுக்கு, தலா 8 கிராம் தங்கம் வீதம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 1,320 கிராம் தங்கம் என மொத்தம், ரூ. 1.74 கோடி திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கும் தங்கம் வழங்கப்படுகிறது என அவர் கூறினார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu