பென்சன்தாரர் உயிரிழந்தால், வங்கி கணக்கில் மற்றவர்கள் பணம் எடுப்பது குற்றம்
ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.
நாமக்கல் மாவட்டத்தில், பென்சன் பெறுவோர் உயிரிழந்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது குற்றம் என்று மாவட்டட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உளள மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் பென்சன் பெறும் ஓய்வுபெற்றோர், கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான நேர்காணல் மற்றும் ஆயுள்சான்று சமர்ப்பிப்பதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பென்சன் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவர்கள் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினால் அவர்களுடைய வாரிசுதாரர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட அல்லது சார்நிலை கருவூலகங்களுக்கு இறப்பு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்காமல் பென்சனர்களின் வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி முறைகேடாக பணம் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே ஓய்வூதியர் இறப்பு தொடர்பான தகவலை அருகில் உள்ள மாவட்ட அல்லது சார்நிலைக் கருவூலங்களில் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu