நாமக்கல் அரசு கல்லூரியில் வன உயிரின வார விழா: எம்.பி., ராஜேஷ்குமார் பங்கேற்பு

நாமக்கல் அரசு கல்லூரியில் வன உயிரின வார விழா: எம்.பி., ராஜேஷ்குமார் பங்கேற்பு
X

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவில் எம்.பி ராஜேஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாம் எம்.பி. சுந்தரம் ஆகியோர்

நாமக்கல் அரசு கல்லூரியில் நடைபெற்ற வன உயிரின வார விழாவில் எம்.பி., ராஜேஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக வன உயிரின வார விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ராஜ்சயபா எம்.பி., ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். அப்போது கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னாள் எம்.பி சுந்தரம், கல்லூரி சுற்றுச் சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரபாண்டியன், ஜேஆர்சி அலுவலர் வெஸ்லி, திமுக ஒன்றிய செயலாளர்கள் நவலடி, அசோக்குமார், மாநிலவிவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கைலாசம், நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
உங்க Business முன்னேற்றம் அடைவதற்கான சிறந்த AI வழிமுறைகள்!