புதுச்சத்திரத்தில் கொமதேக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு : மாதேஸ்வரன் எம்.பி., பங்கேற்பு

புதுச்சத்திரத்தில் கொமதேக சார்பில் நீர் மோர்    பந்தல் திறப்பு : மாதேஸ்வரன் எம்.பி., பங்கேற்பு
X

புதுச்சத்திரத்தில் கொமதேக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் திறந்து வைத்தார்.

புதுச்சத்திரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, நீர் மோர் பந்தலை நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் திறந்து வைத்தார்.

நாமக்கல்,

புதுச்சத்திரத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, நீர் மோர் பந்தலை நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பஸ் ஸ்டாப்பில், கொமதேக சார்பில், பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, கொமதேக மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் விழாவில் கலந்துகொண்டு, நீர் மோர் பந்தலை துவக்கி வைத்து, பொதுமக்களும் பழங்கள், நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கொமதேக தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகதீஸ்வரன், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story