நாமக்கல்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற கடைசி வாய்ப்பு

கோப்பு படம்
இது குறித்து, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவக ஆர்டிஓ முருகேசன் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, உட்பட்ட பகுதி மற்றும் ராசிபுரம் பகுதியில் பல்வேறு குற்றங்கள் மற்றும் குறைபாடுகளுக்காக சிறைபிடிக்கப்பட்ட, டூ வீலர்கள், 3 வீலர்கள், 4 வீலர்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகன விபரங்கள் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ,வாகனம் தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் காட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். வரும் 15 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிமை கோரப்படாத வாகனங்கள் என கருதி அந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu