நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு முதல் நாளில் யாரும் தாக்கல் செய்யவில்லை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு முதல் நாளில் யாரும் தாக்கல் செய்யவில்லை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு முதல் நாளில் யாரும் தாக்கல் செய்யவில்லை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று 28ம் தேதி துவங்கியது. முதல் நாளில் நாமக்கல் மாவட்டத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் 153 வார்டுகளும், ஆலாம்பாளையம், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, ஆர்.பட்டணம், பிள்ளா நல்லூர், பொத்தனூர், ஆர். புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், வேலூர், வெங்கரை, வெண்ணந்தூர் ஆகிய 19 டவுன் பஞ்சாயத்துக்களிலும் உள்ள 294 வார்டுகளிலும், மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற பிப்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 558 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில் இன்று 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அனைத்து நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களில் தேர்தல் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெறுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். இருப்பினும் மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியிலும், எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....