நாமக்கல் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

பைல் படம்.

நாமக்கல் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டியை சேர்ந்தவர் செங்கோடன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கவின் (22), இன்ஜினியர். சம்பவத்தன்று இரவு, கவின் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி தனது டூ வீலரில் சென்றார். நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு டூ வீலரும் கவின் சென்ற டூ வீலரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கவின் படுகாயம் அடைந்தார். மேலும் மற்றொரு டூ வீலரில் வந்த சிராஜூதீன் (39), ரியாஜூதீன் (17) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிøச்சைக்காக அனுப்பி வைத்தனர். வரும் வழியில், கவின் உயிரிழந்தார். சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சிராஜூதீன் உயிரிழந்தார். ரியாஜூதீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story