நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு
X

பைல் படம்.

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (54) லாரி டிரைவர். இவர், சம்பவத்தன்று மாலை 4.30 மணிக்கு, நல்லிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற புதிய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய விஸ்வநாதன், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரி யாருடையது, ஓட்டிவந்த டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and iot in healthcare