காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம்: நாமக்கல் வந்த ராஜஸ்தான் இளைஞர்
காஷ்மீர் முதல் கன்சனியாகுமரி வரை 4,000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ள ராஜஸ்தான் இளைஞர் பிரதீப்குமார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4 ஆயிரம் கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டுள்ள, ராஜஸ்தான் மாநில இளைஞர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகன்லால் என்பவர் மகன் பிரதீப்குமார் (21), அங்குள்ள எம்.எஸ்.எல்.யு. கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இந்திய மாநிலங்களின் கலாசாரம் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டு இவர், காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதையொட்டி கடந்த 30.11.21-ல் காஷ்மீர் மாநிலம் ஜம்முதாவி பகுதியில் இருந்து தனது நடை பயணத்தைத் தொடங்கினார். கடந்த 5 மாதங்களாக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம் வழியாக நடந்து இப்போது தமிழகம் வந்துள்ளார். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக வந்த அவர் நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தார்.
சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தேசியக்கொடியுடன் சென்ற அவரிடம், நடை பயணம் குறித்து கேட்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும், குறிப்பாக தென்னிந்தியாவின் கலாசாரம் குறித்து அறிந்துகொள்ள இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன். நாளொன்று சுமார் 25 முதல் 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் செல்வேன். நெடுஞ்சாலைகளில் உள்ள வடமாநிலத்தவர்களின் தாபா ஓட்டல்கள், மார்வாடிகள் உதவியுடன் தங்கி உணவருந்தி ஓய்வெடுத்துச் செல்வேன். இன்னும் ஒரு மாதத்தில் எனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்து, பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் ராஜஸ்தான் திரும்புவேன் என்றார்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள், மக்களின் கலாச்சாரம், கிராமிய உடைகள், இட்லி, தோசை போன்ற உணவுகள் என்னைக் கவர்ந்துள்ளன என்றார். மேலும் இந்த பயணத்தை இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக ராஜஸ்தான் இளைஞர் பிரதீப்குமார் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu